Skip to main content

Thirumurai First Songs

 First Songs:


முதலாம் திருமுறை  – திருஞான சம்பந்தர் தேவாரம்

திருப்பிரமபுரம் திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை 


முதலாம் திருமுறை  – திருஞான சம்பந்தர் தேவாரம்

திருப்பிரமபுரம் – பாடல் எண் : 1

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
___________________________________________


முதலாம் திருமுறை  – திருஞான சம்பந்தர் தேவாரம்
பொது – பாடல் எண் : 1

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
___________________________________________

முதலாம் திருமுறை – திருஞான சம்பந்தர் தேவாரம்
திருவீழிமிழலை – பாடல் எண் : 1-5

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்    
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.  

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்    
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

நீறு பூசினீர், ஏற தேறினீர்    
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.  

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்    
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.
___________________________________________

இரண்டாம் திருமுறை – திருஞான சம்பந்தர் தேவாரம்
ஆலவாய் (மதுரை) – திருநீற்றுப்பதிகம் – பாடல் எண் : 1

மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே.

___________________________________________

இரண்டாம் திருமுறை – திருஞான சம்பந்தர் தேவாரம்
பொது – பாடல் எண் : 1

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

___________________________________________

இரண்டாம் திருமுறை – திருஞான சம்பந்தர் தேவாரம்
மயிலாப்பூர் – பாடல் எண் : 1

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

 ___________________________________________

மூன்றாம்-திருமுறை – திருஞான சம்பந்தர் தேவாரம்
பொது – பாடல் எண் : 1

காத லாகிக்  கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை  நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்   மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம்  நமச்சி வாயவே.  
___________________________________________

மூன்றாம்-திருமுறை – திருஞான சம்பந்தர் தேவாரம்
திருவாவடுதுறை – பாடல் எண் : 1

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

___________________________________________

நான்காம் திருமுறை  – திருநாவுக்கரசர் தேவாரம்
 கோயில் – பாடல் எண் : 4

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.

___________________________________________

நான்காம் திருமுறை  – திருநாவுக்கரசர் தேவாரம்
பொது – பாடல் எண் : 1

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

நான்காம் திருமுறை  – திருநாவுக்கரசர் தேவாரம்
பொது – (திருஅங்கமாலை) பாடல் எண் : 1

தலையே நீவணங்காய் – தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

___________________________________________

நான்காம் திருமுறை  – திருநாவுக்கரசர் தேவாரம்
ஐயாறு – பாடல் எண் : 1

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

___________________________________________

நான்காம் திருமுறை  – திருநாவுக்கரசர் தேவாரம்
திருத்தூங்கானைமாடம்- பாடல் எண் : 1

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச்  சுடர்க்கொழுந்தே. 

___________________________________________

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம்
பொது – பாடல் எண் : 1

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

___________________________________________

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம்
திருவான்மியூர்- பாடல் எண் : 1

விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.

___________________________________________

ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம்
சோற்றுத்துறை – பாடல் எண் : 1

மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
    முறைமையால் எல்லாம் படைக்கின் றானே
ஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே
    இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
    கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
    திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.

___________________________________________

ஏழாம் திருமுறை – சுந்தரர் தேவாரம்
திருவெண்ணெய்நல்லூர் – பாடல் எண் : 1

பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேனென லாமே.

___________________________________________

ஏழாம் திருமுறை – சுந்தரர் தேவாரம்
திருப்புகலூர் – பாடல் எண் : 1

தம்மையே புகழ்ந் திச்சை பேசினுஞ் சார்கினுந் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே யெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தருஞ் சோறுங் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவ லோகம் ஆள்வதற்கி யாதும் ஐயுற வில்லையே.

___________________________________________

ஏழாம் திருமுறை – சுந்தரர் தேவாரம்
திருமழபாடி – பாடல் எண் : 1

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

___________________________________________

ஏழாம் திருமுறை – சுந்தரர் தேவாரம்
ஆரூர் – திருத்தொண்டத்தொகை – பாடல் எண் : 1

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

___________________________________________

எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர் திருவாசகம்
பிடித்தப்பத்து  – பாடல் எண் : 3

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே.


___________________________________________

ஒன்பதாம் திருமுறை - திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா

கோயில் - பாடல் எண் : 1


ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.


ஒன்பதாம் திருமுறை - சேந்தனார் திருப்பல்லாண்டு

கோயில் - பாடல் எண் : 1


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே. 



___________________________________________

பன்னிரண்டாம் திருமுறை – சேக்கிழார் திருத்தொண்டர் புராணம்

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் .

Popular posts from this blog

Devotional

  விநாயகர் அகவல் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஶ்ரீ ருத்ரம் நமகம் ஶ்ரீ ருத்ரம்   L   திருமுறை திருப்புகழ்   கந்தர் அநுபூதி சுப்ரமண்ய புஜங்கம் கந்தர் அலங்காரம் சண்முக கவசம் திருமுருகாற்றுப்படை – நேரிசை வெண்பாக்கள் ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் வேல் வகுப்பு வேல் விருத்தம் வேல் மாறல் மயில் விருத்தம் குமாரஸ்த்தவம் கந்த புராணம் – திரு அருட்பா அபிராமி அந்தாதி சக்தி பாடல்கள் காயத்ரி மந்திரம் திவ்ய பிரபந்தம் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சாஸ்தா தசகம் ஹரிவராசனம்   Kids Pathigams Ref  

Flute Notes

Playing SRGMPDN Harivarasanam Notes Santhatham Thiruppugazh Notes   Muthai tharu Notes hiruppugazh

Thiruthondar Thogai

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் Thillai Vaazh Andhanar 3000 Dikshitars of Thillai, Shiva himself give their reference to Sunsarar to start Thirutondar Thogai . திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் Tirunilakanta Nayanar Kept the unparalleled promise throughout his life. இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் Iyarpagai Nayanar Offered his spouse to go with him when sivanadiyar asked. இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் Ilayankudi Mara Nayanar Gathered sowed grains, wood from roof to serve food for sivanadiyar. வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் Meiporul Nayanar As a king, allowed his enemy (disguised as sivanadiyar) to take his life and also ordered to protect him. விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் Viralminda Nayanar Vowed to Excommunicate not only Sundarar (who missed to bow to adiyargal) from Shaivism, but also Thyagarajar, as he accepted Sundarar's worship. அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் Amaraneedi Nayanar Offered himself and h...