Skip to main content

திருஞானசம்பந்தர் திருவெழுகூற்றிருக்கை

 திருஞானசம்பந்தர் திருவெழுகூற்றிருக்கை:


தேர்


ஓருரு வாயினை மானாங் காரத்

தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்

ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்

படைத் தளித்தழிப்ப மும் மூர்த்திக ளாயினை

இருவரோடொருவனாகி நின்றனை     1



சொரூப நிலையில் விளங்கும் பரசிவம் ஆகிய நீ உனது இச்சையால் ஐந்தொழில்களை நிகழ்த்த வேண்டி எடுத்துக் கொண்ட ஓருருவமாகிய திருமேனியை உடையை ஆயினை, உன் சக்தியைக் கொண்டு அவ் ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக்குறிப்போடு சத்தி சிவம் என்னும் இரு உருவாயினை, விண் முதலிய பூதங்களையும் சந்திர சூரியர்களையும் தேவர்கள் மக்கள் முதலியோரையும் படைத்துக் காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகள் ஆயினை, பிரமன் திருமால் ஆகிய இருவரையும் வலத்திலும் இடத்திலும் அடக்கி ஏக மூர்த்தியாக நின்றாய்


ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்

முப்பொழுதேத்திய நால்வர்க் கொளிநெறி

காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை

இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை

ஒரு தாள் ஈரயின் மூவிலைச் சூலம்    2 


ஒப்பற்ற கல்லால மரநிழலில் உனது இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய சனகர், சனந்தனர் முதலிய நால்வர்க்கு ஒளி நெறியைக் காட்டினாய், சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோரை மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய பேரிருளை ஓட்டினாய், கங்கையையும் பாம்பையும் பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய்,

ஒரு தாளையும் ஈருகின்ற கூர்மையையும் முத்தலைகளையும் உடைய சூலத்தையும்



நாற்கான் மான்மறி யைந்தலை யரவம்

ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்

திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை

ஒருதனு விருகால் வளைய வாங்கி

முப்புரத் தோடு நானில மஞ்சக்   3


நான்கு கால்களையும் உடைய மான் கன்று, ஐந்து தலை அரவம் ஆகியவற்றையும் ஏந்தினாய்,

சினந்து வந்த, தொங்கும் வாயையும் இரு கோடுகளையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தாய்,ஒப்பற்ற வில்லின் இருதலையும் வளையுமாறு செய்து கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை இவ்வுலகம் அஞ்சுமாறு.... 


கொன்று தலத்துற அவுணரை அறுத்தனை

ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்

முக்குண இருவளி ஒருங்கிய வானோர்

ஏத்த நின்றனை ஒருங்கிய மனத்தோடு

இருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து   4


கொன்று தரையில் அவர்கள் இறந்து கிடக்குமாறு அழித்தாய். ஐம்புலன்கள், நான்கு அந்தக் கரணங்கள், முக்குணங்கள், இரு வாயுக்கள் ஆகியவற்றை ஒடுக்கியவர்களாய தேவர்கள் ஏத்த நின்றாய், ஒருமித்த மனத்தோடு, இரு பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும் செய்யத்தக்க கடன்களை ஆற்றி


நான்மறை ஓதி ஐவகை வேள்வி

அமைத்து ஆறங்க முதலெழுத்து ஓதி

வரன்முறை பயின்று எழுவான்றனை வளர்க்கும்

பிரமபுரம் பேணினை

அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை   5


நான்மறைகளை ஓதி ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு அங்கங்களையும் ஓதி, பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி கொடுத்து மழை பெய்விக்கும் அந்தணர் வாழும் பிரமபுரத்தை விரும்பினாய், ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய்,



இகலிய ஐந்துணர் புகலி அமர்ந்தனை

பொங்கு நாற் கடல் சூழ் வெங்குரு விளங்கினை

பாணி மூவுலகும் புதையமேல் மிதந்த

தோணி புரத் துறைந்தனை தொலையா இரு நிதி

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை    6


தேவர்கள் புகலிடம் என்று கருதி வாழ்ந்த புகலியை விரும்பினாய். நீர் மிகுந்த கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் தலத்தை விரும்பினாய்.

மூவுலகும் நீரில் அழுந்தவும் தான் அழுந்தாது மிதந்த தோணிபுரத்தில் தங்கினாய். வழங்கக் குறையாத செல்வவளம் மிக்க பூந்தராயில் எழுந்தருளினாய்.


வரபுரம் ஒன்றுணர் சிரபுரத் துறைந்தனை

ஒருமலை எடுத்த இருதிறலரக்கன்

விறல்கெடுத் அருளினை புறவம் புரிந்தனை

முந்நீர்த் துயின்றோன் நான்முகனறியாப்

பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை       7


வரந்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய், ஒப்பற்ற கயிலை மலையைப் பெயர்த்த பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை அழித்தாய்.

புறவம் என்னும் தலத்தை விரும்பினாய், கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர் அறிய முடியாத பண்பினை உடையாய்.

சண்பையை விரும்பினாய்.


ஐயுறு மமணரு அறுவகைத் தேரரும்

ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை! 

எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை

ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்

மறைமுதற் நான்கும்      8




ஐயுறும் சமணரும் அறுவகையான பிரிவுகளை உடையபுத்தரும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்கக் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளாய்.

வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன் வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி வாழ்கின்றாய்,

ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால் வேதம்...


மூன்று காலமுந் தோன்ற நின்றனை

இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்

மறுவிலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்     9


அனைய தன்மையை யாதலின் நின்னை

நினைய வல்லவரில்லை நீள் நிலத்தே.


மூன்று, காலம், ஆகியன தோன்ற நிற்கும் மூர்த்தியாயினாய்,

சத்தி சிவம் ஆகிய இரண்டும் ஓருருவமாய் விளங்கும் தன்மையையும் இவ்விரண்டு நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும் தன்மையையும் உணர்ந்த 

குற்றமற்ற அந்தணாளர் வாழும் கழுமலம் என்னும் பழம்பதியில் தோன்றிய கவுணியன்குடித் தோன்றலாகிய ஞானசம்பந்தன் கட்டுரையை விரும்பிப் பிரமன் மண்டையோட்டில் உண்ணும் பெருமானே அறிவான். அத்தன்மையை உடைய நின்னை உள்ளவாறு அறிவார், நீண்ட இவ்வுலகிடை இனிப்பிறத்தல் இலர்.

Popular posts from this blog

Devotional

  விநாயகர் அகவல் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஶ்ரீ ருத்ரம் நமகம் ஶ்ரீ ருத்ரம்   L   திருமுறை திருப்புகழ்   கந்தர் அநுபூதி சுப்ரமண்ய புஜங்கம் கந்தர் அலங்காரம் சண்முக கவசம் திருமுருகாற்றுப்படை – நேரிசை வெண்பாக்கள் ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் வேல் வகுப்பு வேல் விருத்தம் வேல் மாறல் மயில் விருத்தம் குமாரஸ்த்தவம் கந்த புராணம் – திரு அருட்பா அபிராமி அந்தாதி சக்தி பாடல்கள் காயத்ரி மந்திரம் திவ்ய பிரபந்தம் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சாஸ்தா தசகம் ஹரிவராசனம்   Kids Pathigams Ref  

Flute Notes

Playing SRGMPDN Harivarasanam Notes Santhatham Thiruppugazh Notes   Muthai tharu Notes hiruppugazh

Thiruthondar Thogai

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் Thillai Vaazh Andhanar 3000 Dikshitars of Thillai, Shiva himself give their reference to Sunsarar to start Thirutondar Thogai . திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் Tirunilakanta Nayanar Kept the unparalleled promise throughout his life. இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் Iyarpagai Nayanar Offered his spouse to go with him when sivanadiyar asked. இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் Ilayankudi Mara Nayanar Gathered sowed grains, wood from roof to serve food for sivanadiyar. வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் Meiporul Nayanar As a king, allowed his enemy (disguised as sivanadiyar) to take his life and also ordered to protect him. விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் Viralminda Nayanar Vowed to Excommunicate not only Sundarar (who missed to bow to adiyargal) from Shaivism, but also Thyagarajar, as he accepted Sundarar's worship. அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் Amaraneedi Nayanar Offered himself and h...