Skip to main content

Ref

 







தேன் உந்து முக்கனிகள் பால் செங்கருப்பு இளனிர் 

சீரும் பழித்த சிவம் அருள் ஊற


தீதும் பிடித்தவினை ஏதும் பொடித்து விழு

சீவன் சிவச்சொருபம் என தேறி 


நானென் பதற்று உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று வெளி

நாதம் பரப் பிரம ஒளிமீதே


ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியொடு

எநாளும் களிக்க பதம் அருள்வாயே 


வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன்

மாலும் பிழைக்க அலை விட(ம்) மாள 


வாருங் கரத்தன் எமை ஆளும் தகப்பன் மழு

மானின் கரத்தன் அருள் முருகோனே


தானந் தனத்த தனனா வண்டு சுற்றி மது

தானுண் கடப்ப மலர் அணிமார்பா


தானங் குறித்து எமை ஆளும் திருக்கயிலை

சாலும் குறத்தி மகிழ் பெருமாளே.


__________________________________________________________


எருவாய் கருவாய் தனிலே உருவாய்

இதுவே பயிராய் விளைவாகி


இவர்போய் எவராய் அவர்போய் இவராய்

இதுவே தொடர்பாய் வெறிபோல


ஒருதாய் இருதாய் பல கோடி அதாய் 

உடனே அவமாய் அழியாதே 


ஒருகால் முருகா பரமா குமரா 

உயிர்கா எனவோத அருள்தாராய் 


முருகா என ஓர் தரம் ஓத அடியார் 

முடிமேல் இணை தாள் அருள்வோனே


முநிவோர் அமரோர் முறையோ எனவே

முது சூருர மேல் விடும் வேலா


திருமால் பிரமா அறியா தவர் சீர்ச் 

சிறுவா திருமால் மருகோனே 


செழு மாமதில் சேர் அழகார் பொழில் சூழ் 

திருவீழியில் வாழ் பெருமாளே. 

__________________________________________________________


கன்னல் ஒத்த மொழிச் சொல் வேசியர்

வன் மனத்தை உருக்கு லீலையர் 

கண் வெருட்டி விழித்த பார்வையர்...... இதமாகக்


கையில் உற்ற பொருட்கள் யாவையும்

வை எனக்கை விரிக்கும் வீணியர்

கைகள் பற்றி இழுத்து மார் முலை....... தனில் வீழப் 


பின்னி விட்ட சடைக்குளே மலர் 

தன்னை வைத்து முடிப்பை நீ அவிழ்

என்னும் அற்ப குணத்தர் ஆசையில்....... உழலாமல் 


பெய்யு(ம்) முத்தமிழில் தயாபர

என்ன முத்தர் துதிக்கவே மகிழ் 

பிஞ்ஞகர்க்கு உரை செப்பு நாயக...... அருள் தாராய்


வன்னி ஒத்த படைக் கலாதிய 

துன்னு(ம்) கைக் கொள் அரக்கர் மா முடி

மண்ணில் அற்று விழச் செய் மாதவன்......மருகோனே


மன்னு பைப் பணி உற்ற நீள் விடம்

என்ன விட்ட முடுக்கு சூரனை

மல் உடற்று முருட்டு மார்பு அற அடைவாகச்


சென்னி பற்றி அறுத்த கூரிய

மின் இழைத்த திறத்த வேலவ

செய்ய பொன் புன வெற்பு மான் அணை...... மணி மார்பா


செம் மனத்தர் மிகுத்த மாதவர்

நன்மை பெற்ற உளத்திலே மலர் 

செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய...... பெருமாளே


__________________________________________________________


நீதான் எத்தனையாலும் நீடூழிக் கிருபையாகி 

மா தானத் தனமாக மா ஞானக் கழல் தாராய் 

வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா

ஆதாரத்து ஒளியானே ஆரூரிற் பெருமாளே.


__________________________________________________________



சந்தான புஷ்ப பரிமள கிணகிணீ முகச்

   சரண யுகள அமிர்த ப்ரபா


சந்த்ர சேகர மூஷிக ஆரூட வெகு மோக

   சத்ய பிரிய ஆலிங்கன


சிந்தாமணிக கலச கரகட கபோல த்ரி

   யம்பக விநாயகன் முதற்


சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு

   சித்ரக் கலாப மயிலாம்


மந்தாகினி பிரபவ தரங்க விதரங்க

   வன சரோதய கிர்த்திகா


வர புத்ர ராஜீவ பரியங்க தந்தி 

   அ வர அசலன் குலிசாயுதத்


இந்த்ராணி மாங்கல்ய தந்து ரட்சாபரண

   இகல் வேல் விநோதன் அருள் கூர்


இமையகிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ

   ரத்னக் கலாப மயிலே.

__________________________________________________________

கனக சபை மேவும் எனது குருநாத
     கருணை முருகேசப் ...... பெருமாள் காண்

கனக நிற வேதன் அபயம்இட மோதும்
     கர கமல சோதிப் ...... பெருமாள் காண்

வினவும் அடியாரை மருவி விளையாடு
     விரகு ரச மோகப் ...... பெருமாள் காண்

விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர்
     விமல சர சோதிப் ...... பெருமாள் காண்

சனகி மணவாளன் மருகன் என, வேத
     சத மகிழ் குமாரப் ...... பெருமாள் காண்

சரண சிவகாமி, இரண குலகாரி
     தரு முருக நாமப் ...... பெருமாள் காண்

இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு
     இயல் பரவு காதல் ...... பெருமாள் காண்

இணை இல் இப தோகை மதியின் மகளோடும்
     இயல் புலியுர் வாழ்பொன் ...... பெருமாளே.


Popular posts from this blog

Devotional

  விநாயகர் அகவல் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஶ்ரீ ருத்ரம் நமகம் ஶ்ரீ ருத்ரம்   L   திருமுறை திருப்புகழ்   கந்தர் அநுபூதி சுப்ரமண்ய புஜங்கம் கந்தர் அலங்காரம் சண்முக கவசம் திருமுருகாற்றுப்படை – நேரிசை வெண்பாக்கள் ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் வேல் வகுப்பு வேல் விருத்தம் வேல் மாறல் மயில் விருத்தம் குமாரஸ்த்தவம் கந்த புராணம் – திரு அருட்பா அபிராமி அந்தாதி சக்தி பாடல்கள் காயத்ரி மந்திரம் திவ்ய பிரபந்தம் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சாஸ்தா தசகம் ஹரிவராசனம்   Kids Pathigams Ref  

Flute Notes

Playing SRGMPDN Harivarasanam Notes Santhatham Thiruppugazh Notes   Muthai tharu Notes hiruppugazh

Thiruthondar Thogai

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் Thillai Vaazh Andhanar 3000 Dikshitars of Thillai, Shiva himself give their reference to Sunsarar to start Thirutondar Thogai . திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் Tirunilakanta Nayanar Kept the unparalleled promise throughout his life. இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் Iyarpagai Nayanar Offered his spouse to go with him when sivanadiyar asked. இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் Ilayankudi Mara Nayanar Gathered sowed grains, wood from roof to serve food for sivanadiyar. வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் Meiporul Nayanar As a king, allowed his enemy (disguised as sivanadiyar) to take his life and also ordered to protect him. விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் Viralminda Nayanar Vowed to Excommunicate not only Sundarar (who missed to bow to adiyargal) from Shaivism, but also Thyagarajar, as he accepted Sundarar's worship. அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் Amaraneedi Nayanar Offered himself and h...