நால்வர் துதி :
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி!
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!
=================================================
திருவலிவலம் 1.123 - பூவியல் புரிகுழல்
பிடியதன் உரு உமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலிவல முறை இறையே 5
மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை
தன்னியல் கலை வலதமிழ் விரகனதுரை
உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே 11
=================================================
பட்டினத்தார்: கல்லாப் பிழையும்
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும், தொழாப் பிழையும்,
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்; கச்சி ஏகம்பனே!
=================================================
வட்டனை மதிசூடியை - 5.4
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ? [1]
வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ? [2]
மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
சித்தனை, திரு அண்ணாமலையனை,
முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ? [3]
காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
தேற்றனை, திரு அண்ணாமலையனை,
கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ? [4]
மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை, திரு அண்ணாமலையனை,
என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ? [5]
மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
சென்றனை, திரு அண்ணாமலையனை,
வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ? [6]
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ? [7]
கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
திருவினை, திரு அண்ணாமலையனை,
உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ? [8]
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ? [9]
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ? [10]
– திருச்சிற்றம்பலம் –
=================================================
இத்தனை யாமாற்றை - 7.29
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்று உம்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணி தன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.1
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியிற் கயல் பாயக் குளத்திடை மடை தோறுங்
காவியுங் குவளையுங் கமலஞ் செஙகழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.2
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே
காடு நல்லிடமாகக் கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.3
வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய அணிநடை மடஅன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.4
வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ண வெண்ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.5
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.6
போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.7
மலக்கில்நின் அடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமர்என்னைக்
கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.8
படுவிப்பாய் உனக்கேஆள் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோலுடுத்து உழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.9
வளங்கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகாய
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப் பகையவள் அப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 7.29.10
– திருச்சிற்றம்பலம் –
==================================================
மற்றுப் பற்றெனக் - 7.48
மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்லும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான் மறக்கினுஞ் சொல்லும் நா நமச்சி வாயவே. 1
இட்டனும் அடி யேத்து வார்இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்ட நாளிவை என்றலாற் கருதேன் கிளர் புனற் காவிரி
வட்டவா சிகை கொண்டடி தொழு தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 2
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர் போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்றலாற் கருதேன் கிளர் புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே. 3
எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன்மாமணி
கல்லை யுந்தி வளம் பொழிந்திழி காவிரி அதன் வாய்க்கரை
நல்லவர் தொழுதேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 4
அஞ்சினார்க்கரண் ஆதி யென்றடியேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்சலென்றடித் தொண்டனேற்கருள் நல்கினாய்க் கழிகின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே. 5
ஏடு வானிளந் திங்கள் சூடினை என்பின் கொல் புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த அழகனே அந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்திழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 6
விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 7
செம்பொனேர் சடையாய் திரிபுரந்தீயெ ழச்சிலை கோலினாய்
வம்புலாங் குழலாளைப் பாகம மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற் குயில் கூவ மாமயிலாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே. 8
சாரணன் தந்தை எம்பிரானெந்தை தம்பிரானென் பொன்மாமணி யென்று
பேரெணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் றொழுங் கறையூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே. 9
கோணிய பிறை சூடியைக் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியைப்
பாணுலா வரி வண்டறை கொன்றைத் தாரனைப் படப் பாம்பரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லு வார்க்கில்லை துன்பமே. 10
– திருச்சிற்றம்பலம் –
====================================================
பொன்னார் மேனியனே - 7.24
பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே 1
கீளார் கோவணமுந்
திருநீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன்
தலைவாயெனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணி பங்கா
மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே 2
எம்மான் எம்மனையென்
றெனக்கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி
பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே 3
பண்டே நின்னடியேன்
அடியாரடி யார்கட்கெல்லாந்
தொண்டே பூண்டொழிந்தேன்
தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே 4
கண்ணாய் ஏழுலகுங்
கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப்
பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே 5
நாளார் வந்தணுகி
நலியாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன்
அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும்
மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே 6
சந்தா ருங்குழையாய்
சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய்
விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே 7
வெய்ய விரிசுடரோன்
மிகுதேவர் கணங்களெல்லாஞ்
செய்ய மலர்களிட
மிகுசெம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே 8
நெறியே நின்மலனே
நெடுமாலயன் போற்றிசெய்யுங்
குறியே நீர்மையனே
கொடியேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே
மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே 9
ஏரார் முப்புரமும்
எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன்
மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன்
ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார்
பரலோகத் திருப்பாரே 10
– திருச்சிற்றம்பலம் –
==================================
7.61
7.70.6
குறைவி லாநிறை வேகுணக் குன்றே
கூத்த னேகுழைக் காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
ஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்
செம்பொ னேதிரு வாவடு துறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே
– திருச்சிற்றம்பலம் –