“குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர்தடிந்தாய்!
புன்தலைய பூதப்பொரு படையாய் – என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறுஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை.” – – – – – – – – – – – – 1
“குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றுஅங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் – இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்!” – – – – – – – – – – – – 2
“வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.” – – – – – – – – – – – – 3
“உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் – பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே!” – – – – – – – – – – – – 5
“அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் ‘அஞ்சல்!’ எனவேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
‘முருகா!’ என்று ஓதுவார் முன்.” – – – – – – – – – – – – 6
“முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.” – – – – – – – – – – – – 7