Skip to main content

திருவண்டப் பகுதி

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,ஆராயுமிடத்து அண்டம் எனப்படும் பேருலகின் பகுதியாகிய, உருண்டை வடிவின் விளக்கமும்
அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சிஅளத்தற்கரிதாகிய தன்மையும் வளமான பெருங்காட்சியும்
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்ஒன்றுக்கொன்று தொடர்ந்து நின்ற அழகைச் சொல்லுமிடத்து
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;நூற்றொரு கோடியினும் மேற்பட்டு விரிந்துள்ளன
இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய, 5அவை, வீட்டில் நுழைகின்ற சூரிய கிரணத்தில் நெருங்கிய அணுக்களை நிகர்க்கச்
சிறிய ஆகப் பெரியோன். தெரியின்சிறியவையாகும்படி பெரியவனாய் இருப்பவன்.
வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும்,பிரமனும் அவனைச் சூழ்ந்தவரும் ஆகிய அவரது தொகுதி யோடு திருமாலும் அவரைச் சூழ்ந்தோரது மிக்க கூட்டமும்
தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரியஉலகத்தினது உற்பத்தியும் நிலைபேறும் ஆகியவற்றை இறுதியடையச்செய்த
மாப் பேர் ஊழியும், நீக்கமும், நிலையும்,மிகப் பெரிய ஊழிக்காலமும், அவ்வூழியின் நீக்கமும் அந்நீக்கத்தின் பின் உலகம் முன்போலத் தோன்றி நிலைபெறுதலும்
சூக்கமொடு, தூலத்து, சூறை மாருதத்து 10பெரிதாகவும் சிறிதாகவும் வீசுகின்ற சூறைக் காற்றாகிய
எறியது வளியின் 2xவீசும் வளியில் அகப்பட்ட பொருள் போலச் சுழல,
கொட்கப் பெயர்க்கும் குழகன்: முழுவதும்அவற்றை நிலை பெயர்க்கின்ற அழகன். எல்லாப் பொருள்களையும்
படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவைபடைக்கும் பிரமனைப் படைக் கின்ற பழையவன். படைக்கப்பட்ட
காப்போன் காக்கும் கடவுள்; காப்பவைபொருளைக் காப்போனாகிய திருமாலைக் காக்கின்ற கடவுள். காக்கப்பட்ட
கரப்போன்; கரப்பவை கருதாக் 15பொருளை அழிப்பவன். அழிக்கப்பட்டவற்றை நினையாத
கருத்துடைக் கடவுள்; திருத்தகும்கருத்தையுடைய கடவுள். சிறப்புப் பொருந்திய
அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும்அறுவகைப்பட்ட சமயத்தையுடைய, ஆறுவகை ஒழுக்கத்தை உடையவர்க்கும்
வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதிமுத்திப் பேறாய் நின்றும், தேவர் பகுதிகள்
கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும்புழுக்களை ஒக்க நிற்கின்ற பெரியோன், தினந்தோறும்
அருக்கனில் சோதி அமைத்தோன்; திருத்தகு 20சூரியனில் ஒளியை அமைத்தவன். அழகு பொருந்திய
மதியில் தண்மை வைத்தோன்; திண் திறல்சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன். வலிய வெற்றியையுடைய
தீயில் வெம்மை செய்தோன்; பொய் தீர்நெருப்பில் வெப்பத்தை உண்டாக்கினவன். உண்மையாகிய
வானில் கலப்பு வைத்தோன்; மேதகுஆகாயத்தில் வியாபிக்கும் தன்மையை வைத்தவன்.மேன்மை பொருந்திய
காலில் ஊக்கம் கண்டோன்; நிழல் திகழ்காற்றில் அசைவை அமைத்தவன்.நிழல் பொருந்திய
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்படநீரினிடத்து இனிய சுவையை வைத்தவன். வெளிப்படையாக
மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று,மண்ணிடத்து வலிமையை அமைத்தவன். இவ்வாறே எந்நாளிலும்
எனைப் பல கோடி, எனைப் பல பிறவும்,வ்வளவு பல கோடியாகிய எவ்வளவோ பல பிற பொருள்களிலும்
அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன். அஃதான்றுஅவற்றின் தன்மையை அவ்வப் பொருள்களில் அமைத்து வைத்தவன்.
முன்னோன் காண்க! முழுதோன் காண்க!அதுவன்றி எப்பொருட்கும் முன்னே உள்ளவன். முழுதும் நிறைந்தவன்.
தன் நேர் இல்லோன் தானே காண்க! 30தனக்கு நிகர் இல்லாதவன்.
ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க!பழைமையாகிய பன்றியின் பல்லை அணிந்தவன்.
கானப் புலி உரி அரையோன் காண்க!புலியினது தோலை அரையில் உடுத்தவன்.
நீற்றோன் காண்க! நினைதொறும், நினைதொறும்,திருவெண்ணீற்றை அணிந்தவன். அவனது பிரிவை நினைக்கும்தோறும்
ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்!பொறுக்கமாட்டேன். ஐயோ! நான் கெட்டொழிவேன்.
இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க!இனிய இசை வீணையில் பொருந்தியிருப்பது போல, உயிர்களில் நிறைந்து இருப்பவன்.
அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!அப்படிப்பட்டதாகிய வீணை இசை ஒன்றை அவ்விடத்து அறிந்தவன்.
பரமன் காண்க! பழையோன் காண்க!மேலோன். பழையவன்.
பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க!பிரமனும் திருமாலும் காணவொண்ணாத பெரியவன்.
அற்புதன் காண்க! அநேகன் காண்க!வியத்தகு தன்மைகள் உடையவன். எல்லாப் பொருளுமாய் இருப்பவன்.
சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க! 40சொல்லின் நிலையைக் கடந்த பழையோன்.
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க!மனம் சென்று பற்றாத தூரத்தில் இருப்பவன்.
பத்தி வலையில் படுவோன் காண்க!பத்தியாகிய வலையில் அகப்படுவோன்.
ஒருவன் என்னும் ஒருவன் காண்க!ஒருவன் என்னும் சொல்லால் குறிப்பிடப்படும் ஒருவன்.
விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!பரந்த உலகம் முழுவதுமாகிப் பரந்தவன்.
அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க!அணுப் போன்ற தன்மையினையுடைய நுண்ணியவன்.
இணைப்பு அரும் பெருமை ஈசன் காண்க!ஒப்புச் சொல்லுதற்கு அரிய பொருள்யாதினும் அரிய பொருளாகிய அரியவன்.
அரியதில் அரிய அரியோன் காண்க!ஒப்புச் சொல்லுதற்கு அரிய பொருள்யாதினும் அரிய பொருளாகிய அரியவன்.
மருவி எப் பொருளும் வளர்ப்போன் காண்க!பொருந்தி எல்லாப் பொருளையும் காப்பவன்.
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!நூலறிவால் உணரப்படாத நுட்பம் உடையவன்.
மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க! 50மேலும் கீழுமாகிய எவ்விடத்திலும் பரவி நிற்பவன்.
அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!முடிவும் முதலும் நீங்கினவன்.
பந்தமும், வீடும், படைப்போன் காண்க!உயிர்கட்குப் பிறவியாகிய கட்டும், வீடுபேறும் உண்டாக்குவோன்.
நிற்பதும், செல்வதும், ஆனோன் காண்க!இயங்காப் பொருளும் ஆனவன்.
கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க!கற்ப காலத்தையும் அதன் முடிவையும் கண்டவன்.
யாவரும் பெற உறும் ஈசன் காண்க!எல்லோரும் அடையும் பொருட்டு எழுந்தருளுகின்ற தலைவன்.
தேவரும் அறியாச் சிவனே காண்க!தேவரும் அறிய முடியாத சிவபெருமான்.
பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க!பெண் ஆண் அலி என்னும் பாகுபாடுகளில் கலந்துள்ள தன்மையன்.
கண்ணால் யானும் கண்டேன் காண்க!அப்பெருமானை நானும் கண்ணால் கண்டேன்.
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க!அருள் மிகவும் சுரக்கின்ற அமிர்தம்.
கருணையின் பெருமை கண்டேன் காண்க! 60அப்பொருளினது பெருங்கருணையின் ஏற்றத்தைக் கண்டேன்.
புவனியில் சேவடி தீண்டினன் காண்க!அவன் தன் திருவடிகள் பூமியில் படும்படி எழுந்தருளி வந்தான்.
சிவன் என யானும் தேறினன் காண்க!அவனைச் சிவபிரான் என்று நானும் தெளிந்து கொண்டேன்.
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க!அவன் என்னை அடிமை கொண்டருளினன்.
குவளைக் கண்ணி கூறன் காண்க!நீலமலர் போலும் கண்களையுடைய உமாதேவியின் பாகன்.
அவளும், தானும், உடனே காண்க!அத்தகைய உமாதேவியும் தானும் பிரிவின்றியே இருப்பவன்.
பரம ஆனந்தப் பழம் கடல் அதுவேமேன்மையான பேரின்பக் கடல் முழுவதுமே
கரு மா முகிலின் தோன்றி,சூல் கொண்ட கரிய பெருமேகம் போல வடிவெடுத்து
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி,அழகு நிறைந்த திருப்பெருந்துறை என்னும் மலைமேல் ஏறித்
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய,தக்க அருளாகிய மின்னல் வெளிச்ச மானது ஒவ்வொரு திசையிலும் பரவ
ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய, 70ஐவகை வேட்கைப் பிணிப் பாகிய, வாள் போன்ற கொடிய பாம்புகள் கெட்டு ஓட
வெம் துயர்க் கோடை மாத் தலை கரப்ப,பிறவி என்னும் கடுந்துன்பமாகிய வேனிலானது தனது விரிந்த தலையை மறைத்துக் கொள்ள
நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர,மிகுந்த அழகுடைய தோன்றிச் செடி போலத் தோன்றிய ஆசிரியரது ஞானவொளி விளங்க
எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து,எங்கள் பிறவிகளாகிய தம்பலப் பூச்சிகள் செறிந்து தோன்ற
முரசு எறிந்து, மாப் பெரும் கருணையின் முழங்கி,இறைவனின் இரக்கமானது இனிய முரசு அடித்தாற் போல முழக்கம் செய்ய
பூப் புரை அஞ்சலி காந்தள் காட்ட,பூப்போன்றனவாயுள்ள அடியவர் கூப்பிய கைகள் காந்தள் மலர்போல விளங்க
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள,குறையாத இன்பம் தரும் அருளானது சிறிய துளிகளின் வடிவத்தைக் கொள்ள
செம் சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரை உறக்நேர்மையான பேரறிவாகிய வெள்ளம் திக்கெங்கும் பரவ
கேதக் குட்டம் கையற ஓங்கி,துன்பமாகிய குளம் கரையழிய, மலைச் சிகரமளவுக்குப் பொருந்துமாறு உயர்ந்தும்
இரு முச் சமயத்து ஒரு பேய்த்தேரினை,ஆறு சமயங்களாகிய கானல் நீரினை
நீர் நசை தரவரும், நெடும் கண், மான் கணம் 80நீர் வேட்கையுண்டாக வந்த நீண்ட கண்களையுடைய மான் கூட்டம் போன்ற
தவப் பெரு வாயிடைப் பருகி, தளர்வொடும்,சிற்றறிவு உயிர்கள் தமது அகன்ற பெருவாயினால் பருகியும், நடந்த தளர்ச்சியும்
அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன;குந்த தாகமும் நீங்கப் பெறாமல் உழன்றன.
ஆயிடை, வானப் பேர் யாற்று அகவயின்அத்தருணத்தில், அந்த வானப் பேராற்றின் உள்ளிடத்தே புகுந்து பெருகி,
பாய்ந்து எழுந்து, இன்பப் பெரும் சுழி கொழித்து,இன்பப் பெருஞ் சுழலினை உண்டாக்கி
சுழித்து, எம் பந்த மாக் கரை பொருது, அலைத்து, இடித்து,மெய்யாகிய மணிகளை வாரிக் கொண்டு, எமது பாசக்கட்டாகிய கரைகளை மோதி அலைத்து உடைத்து,
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்முறை முறையாய் வளர்ந்து வந்த எங்களுடைய
இரு வினை மா மரம் வேர் பறித்து, எழுந்துல்வினை தீவினை என்னும் இருவினைகளாகிய பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி
உருவ, அருள் நீர் ஓட்டா, அரு வரைச்மிகுந்து வந்த அழகுமிக்க அருள் வெள்ளத்தைச் செலுத்தித் தொண்டராகிய உழவர், கடத்தற்கரிய எல்லையையுடைய
சந்தின் வான் சிறை கட்டி, மட்டு அவிழ்சாந்தம் என்னும் பெரிய அணையைக் கட்டி தேனோடு விரிந்த வாசனையுடைய மலர் போன்ற
வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை அகில் 90இருதயமாகிய குளத்திற்கு உண்மையாகிய நீர் வாயினை அமைத்து, பொறியடக்கம் என்னும் சிறந்த அகிற்
மாப் புகைக் கரை சேர் வண்டு உடைக் குளத்தின்புகை சேரும் வரம்பினையுடைய ஓங்காரமாகிய வண்டு ஒலிக்கும் உள்ளமாகிய குளத்திலே
மீக்கொள, மேல் மேல் மகிழ்தலின், நோக்கி,அருள் வெள்ளமானது மிகுதியாக மேலும் மேலும் நிறைவதைப் பார்த்து
அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு,வழிபாடு என்னும் வயலுள் அன்பு என்னும் வித்தை விதைத்துச்
தொண்ட உழவர் ஆரத் தந்தசிவபோகமாகிய விளைவைத் துய்க்குமாறு உதவிய
அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க!உலகெங்கும் பெறுதற்கரிய மேகம் போன்றவன் வாழ்க!
கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க!கரிய படமுடைய பாம்பைக் கச்சையாக அணிந்த கடவுள் வாழ்க.
அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!அரிய தவத்தினருக்கு அருளுகின்ற முதல்வன் வாழ்க.
அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க!பிறவி அச்சத்தை நீக்கின வீரன் வாழ்க.
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க!நாள்தோறும் அடியார்களை வலிய இழுத்து ஆட்கொள்வோன் வாழ்க.
சூழ் இரும் துன்பம் துடைப்போன், வாழ்க! 100எம்மை வளைத்துக் கொள்கின்ற பெருந்துன்பத்தை நீக்குவோன் வாழ்க
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன், வாழ்க!தன்னை அடைந்தவர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க.
கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!மிகுந்த இருளில் பல வகைக் கூத்தொடு நடிப்போன் வாழ்க.
பேர் அமைத் தோளி காதலன், வாழ்க!பெரிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமாதேவிக்கு அன்பன் வாழ்க.
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!தன்னை வணங்காது அயலாய் இருப்பார்க்கு அயலவனாயிருக்கிற எம் தலைவன் வாழ்க.
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு, வாழ்க!அன்பர்க்கு இளைத்த காலத்தில் சேமநிதி போல்வான் வாழ்க.
நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி!நஞ்சையுடைய பாம்பை ஆட்டிய நம் பெருமானுக்கு வணக்கம்.
பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி!எம்மைத் தனது அருட்பித்தேற்றின பெரியவனுக்கு வணக்கம்.
நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி நால் திசைதிருவெண்ணீற்றுப் பூச்சொடு தோன்ற வல்லவனுக்கு வணக்கம்.நான்கு திக்கிலும்
நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய்,நடப்பவற்றை நடத்தி கிடப்பவற்றைக் கிடத்தி,
நிற்பன நிறீஇச் 110நிற்பவற்றை நிறுத்திச்
சொல் பதம் கடந்த தொல்லோன்;சொல்லளவைக் கடந்த பழையோன்.
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;மன உணர்ச்சியால் கொள்ளப் படாதவன்,
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்;கண் முதலாகிய பொறி களுக்குக் காணவும் படாதவன்.
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்;ஆகாயம் முதலிய பூதங்களை வெளிப்படையாகத் தோன்றப் படைத்தவன்.
பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்மலரின் மணம் போன்று ஓங்கி எவ்விடத்தும்
ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை;நீக்கமில்லாமல் நிறைந்து பொருந்திய தன்மையை
இன்று எனக்கு எளிவந்து, அருளி,இப்பொழுது, அடியேனுக்கு எளிதாக வந்து உணர்த்தியருளி
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள்;அழிகின்ற இவ்வுடம்பை ஒழியச் செய்த சிறந்த பொருளானவன்.
இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி!இன்று எனக்கு எளியவனாய் என் உள்ளத்தில் வீற்றிருந்தவனுக்கு வணக்கம்;
அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி! 120கனிந்து உருகுகின்ற உடம்பை அருள் செய்தவனுக்கு வணக்கம்;
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!இன்ப ஊற்றாயிருந்து மனத்தை மகிழ்விப்பவனுக்கு வணக்கம்.
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய,தாங்க ஒண்ணாத இன்பவெள்ளம் பரவி அலை வீச
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்:அதனை ஏற்றுப் போற்றாத உடம்பைத் தாங்குதலை விரும்பேன்.
மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம்,பச்சை மணியின் குவியலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும்
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ,மின்னலின் ஒளியைத் தன்னிடத்தே கொண்ட ஒரு பொன்னொளி போல் விளங்க
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்;மேலும் கீழும் போய்த் தேடின பிரமனுக்கும் திருமாலுக்கும் மறைந்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்;யோக முறைப்படி ஒன்றி நின்று முயன்றவர்க்கு மறைந்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்துஒருமைப்பாடு கொண்டு நோக்குகின்ற மனத்தையுடைய
உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்;உறவினர் வருந்தும்படி உறுதியோடு இருப்பவர்க்கு மறைந்தும்
மறைத் திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்; 130வேதங்களின் பொருட் கூறுபாடுகளை ஆராய்ந்து பார்த்து வருந்தினவர்க்கு மறைந்தும்
இத் தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு,இவ்வுபாயம் வழியாகக் காண்போம் என்று இருந்தவர்க்கு
அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும்;அவ்வுபாயத்தில், அவ்விடத்திலே மறைந்தும்,
முனிவு அற நோக்கி, நனி வரக் கௌவி,கோபம் இல்லாமல் பார்த்து மிகுதியாகப் பற்றி
ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து,ஆண் போலத் தோன்றியும், அலிபோல இயங்கியும்
வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின்,ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண் போலக் காணப்படும் தன் இயல்பைக் காட்டாது மறைந்தும்
ஐம் புலன் செல விடுத்து, அரு வரைதொறும் போய்,தூரத்தில் ஐம்புலன்களைப் போக நீக்கி அரிய மலைதோறும் சென்று
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கைபொருந்தின பற்றுகளை எல்லாம் விட்ட வெற்றுயிரோடு கூடிய உடம்பையுடைய
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்;அரிய தவத்தினர் நோக்குக்கும் செம்மையாக மறைந்தும்
ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்;ஒரு பொருள் உண்டு என்றும் இல்லை என்றும் ஐயுற்ற அறிவுக்கு மறைந்தும்
பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும், 140ன்னே பழகிய காலத்திலும் இப்பொழுது பழகுங்காலத்திலும்
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்;முஎப்பொழுதும் மறைகின்ற கள்ளனைக் கண்டோம்
ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில்ஆரவாரியுங்கள்; ஆரவாரியுங்கள்; புதிய மலர் மாலைகளால்
தாள் தளை இடுமின்!திருவடியைக் கட்டுங்கள்
சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்!சுற்றுங்கள்; சூழுங்கள்; பின் தொடருங்கள்; விடாதீர்
பற்றுமின்!' என்றவர் பற்று முற்று ஒளித்தும்;பிடியுங்கள் என்று சொல்லியவர்களது பற்றுதலுக்கு முழுதும் மறைந்தும்
தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மைதனக்கு நிகரில்லாதவன் தானேயாகிய தன்மையை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி,என் போல்வார் கேட்கும்படி வந்து சொல்லி
அறை கூவி, ஆட்கொண்டருளி,வலிந்து அழைத்து அடிமை கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்;வேதியர் கோலத்தைக் காட்டியருளுதலும்
உலையா அன்பு என்பு உருக, ஓலம் இட்டு, 150வருந்தி என்பு உருக அன்பினால் முறையிட்டு
அலை கடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கி,அசைகின்ற கடல் அலைகள் போல இடையறாது ஆரவாரித்து
தலை தடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறி,மேலெழுந்து தலைதடுமாறி வீழ்ந்து புரண்டு அரற்றி
பித்தரின் மயங்கி, மத்தரின் மதித்து,பித்தர் போல் மயங்கி, வெறி பிடித்தவர் போலக் களித்து
நாட்டவர் மருளவும், கேட்டவர் வியப்பவும்,நாட்டார் மயக்கம் கொள்ளவும் கேட்டவர் வியப்புக் கொள்ளவும்
கடக் களிறு ஏற்றாத் தடப் பெரு மதத்தின்மதயானையும் ஏற்கப் பெறாத மிகப்பெரிய மதத்தால் தரியேனாக
ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதருஎன் உறுப்புகளைத் தீஞ்சுவையினைத் தருகின்ற
கோல் தேன் கொண்டு செய்தனன்;கொம்புத்தேன் கொண்டு ஆக்கினான்.
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்பகைவருடைய பழைய ஊராகிய மூன்று புரங்களை அழகிய நகையாகிய நெருப்பினால்
வீழ்வித்தாங்கு, அன்று,அழித்தது போல, அக் காலத்தில்
அருள் பெரும் தீயின் அடியோம் அடிக் குடில் 160அருளாகிய பெரிய நெருப்பினால், அடியோங்களுக்கு உரிய குடிலாகிய
ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்;உடம்பை ஒருத்தரேனும் தவறாதபடி அடங்கப் பண்ணினான்.
தடக் கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்:அடியேனுக்குப் பெரிய கையிலுள்ள நெல்லிக்கனி போன்றிருந்தான்.
சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ?இவ்வாறு எனக்கு எளி வந்த கருணையின் பெருமையை யான் சொல்லுமாறு அறியேன்.அவன் வாழ்க.
தரியேன் நாயேன்; தான் எனைச் செய்ததுஅவன் என்னைச் செய்த நிலையை நாயினேன் ஆற்றேன்.
தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்குஅதன் காரணத்தையும் அறிந்திலேன். இது எனக்குச் செய்யும் முறையோ? ஐயோ செத்தேன்; அடியேனுக்குச்
அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்;செய்த அருளையும் அறியேன்.சிறுகச் சிறுகக் குடித்தும் நிறைவு பெற்றிலேன்:
விழுங்கியும் ஒல்லகில்லேன்:முழுதுமாய் விழுங்கியும் பொறுக்க மாட்டேன்.
செழும், தண் பால் கடல் திரை புரைவித்து,செழுமையாகிய குளிர்ந்த பாற்கடலின் அலைகளை உயரச்செய்து
உவாக் கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப,நிறைமதி நாளில் பெருகும் கடலில் பொருந்திய நீர்போல உள்ளத்தினுள்ளே பொங்க,
வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால் தோறும், 170சொல்லிறந்த அமுதமானது ஒவ்வொரு மயிர்க் காலிலும் நிறையச் செய்தனன்
தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழைநாயினேனது உடலின் கண்ணே இருக்கை கொண்டு கொடியேனுடைய மாமிசம்
குரம்பைதோறும், நாய் உடல் அகத்தேசெழித்த ஒவ்வொரு மடையிலும்
குரம்பு கொண்டு, இன் தேன் பாய்த்தினன்; நிரம்பியசெழித்த ஒவ்வொரு மடையிலும், இனிய தேனைச் பாய்ச்சி நிறைந்த
அற்புதமான அமுத தாரைகள்,ஆச்சரியமான அமுத தாரைகளை
எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவதுஎலும்புத் துளை தோறும் ஏறச் செய்தனன்.உருகுவதாகிய
உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு, எனக்குமனத்தைக் கொண்டு ஓர் உருவம் அமைத்தாற் போல அடியேனுக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளியமிகுதியும் உருகுகின்ற உடம்பை அமைத்தான். இனிதாகிய
கன்னல் கனி தேர் களிறு என, கடைமுறைகனியைத் தேடுகின்ற யானை போல இறுதியில்
என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில்அடியேனையும் அவனையே நாடி இருப்பதாகச் செய்தருளினன். என்னுள்ளே
கருணை வான்தேன் கலக்க 180அருளாகிய பெருந்தேன் பாயும்படி
அருளொது பரவமு தாக்கினன்அருளொடு எழுந்தருளி மிக்க அமுதத்தினையும் அமைத்தான்.
பிரமன்மால் அரியாப் பெற்றியோனே. (182)பிரமனும் திருமாலும் தேடியும் அறியாத தன்மையுடையான்.
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

Popular posts from this blog

Devotional

  விநாயகர் அகவல் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஶ்ரீ ருத்ரம் நமகம் ஶ்ரீ ருத்ரம்   L   திருமுறை திருப்புகழ்   கந்தர் அநுபூதி சுப்ரமண்ய புஜங்கம் கந்தர் அலங்காரம் சண்முக கவசம் திருமுருகாற்றுப்படை – நேரிசை வெண்பாக்கள் ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் வேல் வகுப்பு வேல் விருத்தம் வேல் மாறல் மயில் விருத்தம் குமாரஸ்த்தவம் கந்த புராணம் – திரு அருட்பா அபிராமி அந்தாதி சக்தி பாடல்கள் காயத்ரி மந்திரம் திவ்ய பிரபந்தம் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சாஸ்தா தசகம் ஹரிவராசனம்   Kids Pathigams Ref  

Flute Notes

Playing SRGMPDN Harivarasanam Notes Santhatham Thiruppugazh Notes   Muthai tharu Notes hiruppugazh

Thiruthondar Thogai

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் Thillai Vaazh Andhanar 3000 Dikshitars of Thillai, Shiva himself give their reference to Sunsarar to start Thirutondar Thogai . திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் Tirunilakanta Nayanar Kept the unparalleled promise throughout his life. இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் Iyarpagai Nayanar Offered his spouse to go with him when sivanadiyar asked. இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் Ilayankudi Mara Nayanar Gathered sowed grains, wood from roof to serve food for sivanadiyar. வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் Meiporul Nayanar As a king, allowed his enemy (disguised as sivanadiyar) to take his life and also ordered to protect him. விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் Viralminda Nayanar Vowed to Excommunicate not only Sundarar (who missed to bow to adiyargal) from Shaivism, but also Thyagarajar, as he accepted Sundarar's worship. அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் Amaraneedi Nayanar Offered himself and h...