Skip to main content

சடையாய்! எனுமால்

சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்;சடையாய் என்றும் நீயே எனக்குப் புகலிடம் என்றும்
விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்;விடையாய் என்றும் கூறி அஞ்சி மயங்கிவிழுகின்றாள்
மடை ஆர் குவளை மலரும் மருகல்நீர்நிலைகளில் குவளை மலர்கள் மலர்ந்து மணம் செய்யும் திருமருகலைத்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே? 1தனக்குரிய ஊராக உடைய பெருமானே! உன்னையே நினைந்து புலம்பும் இவள் மனவருத்தத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத்தக்கதோ?
சிந்தாய்! எனுமால்; சிவனே! எனுமால்;சிந்தையில் நிறைந்துள்ளவனே! என்றும் சிவனே என்றும்
முந்தாய்! எனுமால்; முதல்வா! எனுமால்;எல்லோர்க்கும் முற்பட்டவனே என்றும், முதல்வனே` என்றும்
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்பூங்கொத்துக்கள் குவளை மலர் ஆகியன மலர்ந்து மணம் பரப்பும் திருமருகலில்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே? 2எழுந்தருளிய எம் தந்தையே! புலம்பி நைகின்றாள். இவள் துன்பத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,ஒலிக்கின்ற வீரக்கழலையும், கொடிய விடம் பொருந்திய வாயினை உடைய பாம்பையும்
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரியபிறையணிந்த சடையினையும் உடையவனே! பெருமைக்குரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளைவேதங்களைக் கற்றுணர்ந்த மறையவர் வாழும் திருமருகலில் மகிழ்ந்து உறைபவனே! இப்பெண்ணை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே? 3அவள் முன்கையில் அணிந்திருந்த வளையல்களைக் கவர்ந்ததோடு அழகையும் கவர்ந்தாயே! இதுதகுமோ?
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்முழங்கிவந்த கங்கையைத் தன் சடைமிசை மறைத்தவனே! உலகெங்கணும்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!சென்று பலியேற்றுத் திரிபவனே! குற்றம் அற்ற புகழாளனே!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளைநீர் நிறைந்த திருமருகலைத் தனது இடமாகக் கொண்டு மகிழ்பவனே! இப்பெண்ணை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே? 4மெலியும் நீர்மையள் ஆக்கவும் விரும்பினையோ?
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்னதெளிந்த நீல நிறம் பொருந்திய மேகம் தோன்றினாற் போன்ற
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!அழகிய நீலகண்டத்தை உடையவனே! திருமருகலை வந்தடைந்த
கணி நீல வண்டுஆர் குழலாள் இவள்தன்நீலவண்டுகளின் தொகுதியோ எனக்கருதக் கூடிய கூந்தலை உடைய இளைய இப்பெண்ணின்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே? 5ஒளிபொருந்திய கண்கள் கலங்குமாறு இவளுக்கு அயர்வை உண்டாக்கி விட்டாயே. இது தகுமோ?
பலரும் பரவப் படுவாய்! சடைமேல்பலராலும் பரவிப் போற்றப் படுபவனே! சடையின்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!மேல் விளங்கித் தோன்றும் பிறை ஒன்றை உடையவனே! திருமருகலை
புலரும்தனையும் துயிலாள், புடை போந்துவந்தடைந்த இப்பெண் விடியும் அளவும் துயிலாதவளாய்த் துயருறு கிறாள்
அலரும் படுமோ, அடியாள் இவளே 6அடியவளாகிய இவள்மீது பழிமொழி வருவது தக்கதோ?
வழுவாள்; பெருமான்கழல் வாழ்க! எனாதவறாமல் `பெருமான் திருவடிகள் வாழ்க` என்று தொழுபவளாகிய
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;துயில் எழுந்து இரவும் பகலும் உன்னையே நினைந்து
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!மழுப்படையை உடையவனே! மருகற் பெருமானே!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே? 7இவளைத் துயருக்குரியவள் ஆக்கினையே! இது தகுமோ?
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;அவனது ஆற்றல் அழியுமாறு, விளங்கும் தனது காற்பெருவிரலை ஊன்றிய அளவில் அவன் செய்வதறியாது இடர்ப்பட்டு மீண்டு
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!வலமாக வந்து பணிந்து வரம் கொண்ட மருகற்பெருமானே!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே? 8மாலைசூடி மணம் கொள்ள இருந்த இவளுக்குத் துன்பம் வரச்செய்தனையே! இது தக்கதோ?
எரி ஆர் சடையும், அடியும், இருவர்நெருப்புப் போலச் சிவந்த சடையையும், அடியையும் திருமால் பிரமன் ஆகிய இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!அறியமுடியாதவாறு ஒளிப்பிழம்பாய் உயர்ந்து தோன்றியவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!பிறவி நீங்கிய முக்தர்கள் வாழும் திருமருகலில் விளங்கும் பெருமானே!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே? 9அரியவளாக இத்தலத்துக்குவந்த இவளைத் துன்புறச்செய்தாயே! இது தக்கதோ?
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்அறிவற்ற சமணர்களும் எங்கும் பரவி வாழும் சாக்கியர்களும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;நெறியல்லனவற்றைச் செய்து நின்று உழல்பவராவர்.
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!மான்கன்றை ஏந்திய கையை உடையவனே! மருகற் பெருமானே!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே? 10உன்னை நினையும் அடர்ந்த கூந்தலினளாய இப்பெண்ணின் மனத்தைச் சிதறுண்ணச்செய்தீரே, இது தகுமோ?
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகற் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,திருவடிகளை உயர்ஞானம் உணர்ந்து நினைதலால்
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,பதி இயல்புற்ற ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களைப் பாடவல்லார்
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே. 11புகழ், அகன்ற இவ்வுலக மெல்லாம் விளங்கித்தோன்றும்.

Popular posts from this blog

Devotional

  விநாயகர் அகவல் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஶ்ரீ ருத்ரம் நமகம் ஶ்ரீ ருத்ரம்   L   திருமுறை திருப்புகழ்   கந்தர் அநுபூதி சுப்ரமண்ய புஜங்கம் கந்தர் அலங்காரம் சண்முக கவசம் திருமுருகாற்றுப்படை – நேரிசை வெண்பாக்கள் ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் வேல் வகுப்பு வேல் விருத்தம் வேல் மாறல் மயில் விருத்தம் குமாரஸ்த்தவம் கந்த புராணம் – திரு அருட்பா அபிராமி அந்தாதி சக்தி பாடல்கள் காயத்ரி மந்திரம் திவ்ய பிரபந்தம் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சாஸ்தா தசகம் ஹரிவராசனம்   Kids Pathigams Ref  

Flute Notes

Playing SRGMPDN Harivarasanam Notes Santhatham Thiruppugazh Notes   Muthai tharu Notes hiruppugazh

Thiruthondar Thogai

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் Thillai Vaazh Andhanar 3000 Dikshitars of Thillai, Shiva himself give their reference to Sunsarar to start Thirutondar Thogai . திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் Tirunilakanta Nayanar Kept the unparalleled promise throughout his life. இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் Iyarpagai Nayanar Offered his spouse to go with him when sivanadiyar asked. இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் Ilayankudi Mara Nayanar Gathered sowed grains, wood from roof to serve food for sivanadiyar. வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் Meiporul Nayanar As a king, allowed his enemy (disguised as sivanadiyar) to take his life and also ordered to protect him. விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் Viralminda Nayanar Vowed to Excommunicate not only Sundarar (who missed to bow to adiyargal) from Shaivism, but also Thyagarajar, as he accepted Sundarar's worship. அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் Amaraneedi Nayanar Offered himself and h...