Skip to main content

பொன்னார் மேனியனே 7.24

 பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து,

மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!

மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!

அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?     1


கீள் ஆர் கோவணமும், திருநீறு மெய் பூசி, உன்தன்

தாளே வந்து அடைந்தேன்; தலைவா! எனை ஏன்றுகொள், நீ!

வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே!

கேளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?     2


எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்;

இம் மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்;

மைம் மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!

அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?     3


பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு எல்லாம்

தொண்டே பூண்டொழிந்தேன்; தொடராமைத் துரிசு அறுத்தேன்;

வண்டு ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!

அண்டா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?     4


கண் ஆய், ஏழ் உலகும் கருத்து ஆய அருத்தமும் ஆய்,

பண் ஆர் இன் தமிழ் ஆய், பரம் ஆய பரஞ்சுடரே!

மண் ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!

அண்ணா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?      5


நாளார் வந்து அணுகி நலியாமுனம், நின் தனக்கே

ஆளா வந்து அடைந்தேன்; அடியேனையும் ஏன்றுகொள், நீ!

மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே!

ஆளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?    6


சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி! நல்ல

வெந்தார் வெண்பொடியாய்! விடை ஏறிய வித்தகனே!

மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!

எந்தாய்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?      7


வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம்

செய்ய மலர்கள் இட, மிகு செம்மையுள் நின்றவனே!

மை ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!

ஐயா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?     8


நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி செய்யும்

குறியே! நீர்மையனே! கொடி ஏர் இடையாள் தலைவா!

மறி சேர் அம் கையனே! மழபாடியுள் மாணிக்கமே!

அறிவே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?     9


ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை,

வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை,

சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்

பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே      10


Popular posts from this blog

Devotional

  விநாயகர் அகவல் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஶ்ரீ ருத்ரம் நமகம் ஶ்ரீ ருத்ரம்   L   திருமுறை திருப்புகழ்   கந்தர் அநுபூதி சுப்ரமண்ய புஜங்கம் கந்தர் அலங்காரம் சண்முக கவசம் திருமுருகாற்றுப்படை – நேரிசை வெண்பாக்கள் ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் வேல் வகுப்பு வேல் விருத்தம் வேல் மாறல் மயில் விருத்தம் குமாரஸ்த்தவம் கந்த புராணம் – திரு அருட்பா அபிராமி அந்தாதி சக்தி பாடல்கள் காயத்ரி மந்திரம் திவ்ய பிரபந்தம் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சாஸ்தா தசகம் ஹரிவராசனம்   Kids Pathigams Ref  

Flute Notes

Playing SRGMPDN Harivarasanam Notes Santhatham Thiruppugazh Notes   Muthai tharu Notes hiruppugazh

Thiruthondar Thogai

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் Thillai Vaazh Andhanar 3000 Dikshitars of Thillai, Shiva himself give their reference to Sunsarar to start Thirutondar Thogai . திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் Tirunilakanta Nayanar Kept the unparalleled promise throughout his life. இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் Iyarpagai Nayanar Offered his spouse to go with him when sivanadiyar asked. இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் Ilayankudi Mara Nayanar Gathered sowed grains, wood from roof to serve food for sivanadiyar. வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் Meiporul Nayanar As a king, allowed his enemy (disguised as sivanadiyar) to take his life and also ordered to protect him. விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் Viralminda Nayanar Vowed to Excommunicate not only Sundarar (who missed to bow to adiyargal) from Shaivism, but also Thyagarajar, as he accepted Sundarar's worship. அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் Amaraneedi Nayanar Offered himself and h...