Skip to main content

காதலாகிக் கசிந்து 3.49

காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும்
வேதம் நான்கினும், மெய்ப்பொருள் ஆவதுநான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும்
நாதன் நாமம் நமச்சிவாயவே. 1அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும்.
நம்புவார் அவர், நாவின் நவிற்றினால்,சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால்
வம்பு நாள் மலர், வார் மது, ஒப்பது;நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது
செம்பொன் ஆர், திலகம், உலகுக்கு எல்லாம்;எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது
நம்பன் நாமம் நமச்சிவாயவே. 2நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.
நெக்கு உள், ஆர்வம், மிகப் பெருகி(ந்) நினைந்து,உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து
அக்கு மாலை கொடு, அங்கையில் எண்ணுவார்அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத்
தக்க, வானவராத் தகுவிப்பது,தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது
நக்கன் நாமம் நமச்சிவாயவே. 3ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.
இயமன் தூதரும், அஞ்சுவர், இன் சொலால்இயமன் தூதன் பயப்படுவான், இனிமையான சொற்களால்
நயம் வந்து ஓத வல்லார் தமை, நண்ணினால்;திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை அண்டினால்!
நியமம் தான், நினைவார்க்கு இனியான் நெற்றி-தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும், நெற்றிக்
நயனன், நாமம் நமச்சிவாயவே. 4கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும்
கொல் வாரேனும், குணம் பல நன்மைகள்கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும், நற்குணமும்
இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால்
எல்லாத் தீங்கையும், நீங்குவர் என்பரால்எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர்.
நல்லார் நாமம் நமச்சிவாயவே. 5அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும்
மந்தரம்(ம்) அன, பாவங்கள் மேவியமந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து
பந்தனையவர், தாமும், பகர்வரேல்,பாசங்களால் கட்டுண்டவர்களும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால்
சிந்தும் வல்வினை; செல்வமும், மல்குமால்அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும். அவர்கட்குச் செல்வமும் பெருகும்.
நந்தி நாமம் நமச்சிவாயவே. 6அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்பதாகும்.
நரகம் ஏழ்புக, நாடினர் ஆயினும்,ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும்
உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், உருத்திர
விரவியே, புகுவித்திடும், என்பரால்-கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர்.
வரதன் நாமம் நமச்சிவாயவே. 7அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமும் திருவைந்தெழுத்தே ஆகும்.
இலங்கை மன்னன், எடுத்த அடுக்கல் மேல்இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல
தலம் கொள், கால்விரல், சங்கரன் ஊன்றலும்,ங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும்
மலங்கி, வாய்மொழி செய்தவன், உய் வகை,கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே. 8நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும்.
போதன், போது அன, கண்ணனும், அண்ணல்தன்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின்
பாதம் தான், முடி நேடிய, பண்பராய்,திருமுடியையும், திருவடியையும் தேட முயன்று
யாதும், காண்பு அரிது ஆகி, அலந்தவர்,காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே. 9அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது `நமச்சிவாய` என்ற திருவைந்தெழுத்தேயாகும்.
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள்,மண்டை என்னும் பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் பௌத்தர்களும், கைகளையே பாத்திரமாகக் கொண்டு புசிக்கும் சமணர்களும்
வெஞ்சொல் மிண்டர், விரவிலர் என்பரால்-ஓதும் பேறு பெற்றிலர்
விஞ்சை அண்டர்கள், வேண்ட, அமுது செய்தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய
நஞ்சு உண் கண்டன் நமச்சிவாயவே. 10நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்து
நந்தி நாமம், நமச்சிவாய! என்னும்நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும்
சந்தையால்,-தமிழ், ஞானசம்பந்தன் சொல்திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப் பதிகத்தைச்
சிந்தையால் மகிழ்ந்து, ஏத்த வல்லார், எலாம்சிந்தை மகிழ ஓத வல்லவர்கள்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே. 11பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர்.

Popular posts from this blog

Devotional

  விநாயகர் அகவல் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஶ்ரீ ருத்ரம் நமகம் ஶ்ரீ ருத்ரம்   L   திருமுறை திருப்புகழ்   கந்தர் அநுபூதி சுப்ரமண்ய புஜங்கம் கந்தர் அலங்காரம் சண்முக கவசம் திருமுருகாற்றுப்படை – நேரிசை வெண்பாக்கள் ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் வேல் வகுப்பு வேல் விருத்தம் வேல் மாறல் மயில் விருத்தம் குமாரஸ்த்தவம் கந்த புராணம் – திரு அருட்பா அபிராமி அந்தாதி சக்தி பாடல்கள் காயத்ரி மந்திரம் திவ்ய பிரபந்தம் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சாஸ்தா தசகம் ஹரிவராசனம்   Kids Pathigams Ref  

Flute Notes

Playing SRGMPDN Harivarasanam Notes Santhatham Thiruppugazh Notes   Muthai tharu Notes hiruppugazh

Thiruthondar Thogai

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் Thillai Vaazh Andhanar 3000 Dikshitars of Thillai, Shiva himself give their reference to Sunsarar to start Thirutondar Thogai . திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் Tirunilakanta Nayanar Kept the unparalleled promise throughout his life. இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் Iyarpagai Nayanar Offered his spouse to go with him when sivanadiyar asked. இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் Ilayankudi Mara Nayanar Gathered sowed grains, wood from roof to serve food for sivanadiyar. வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் Meiporul Nayanar As a king, allowed his enemy (disguised as sivanadiyar) to take his life and also ordered to protect him. விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் Viralminda Nayanar Vowed to Excommunicate not only Sundarar (who missed to bow to adiyargal) from Shaivism, but also Thyagarajar, as he accepted Sundarar's worship. அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் Amaraneedi Nayanar Offered himself and h...